மோசடியாளர்களுக்கு எதிராக எப்போதும் விழிப்புடன் இருக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்

Finexus Cards Sdn Bhd பயனர்கள் தங்கள் சுய விவரங்களைப் பாதுகாக்க எல்லா நேரங்களிலும் விழிப்புடன் இருக்குமாறு நினைவூட்ட விரும்புகிறது. தங்கள் கையடக்க சாதனங்களில் சரிபார்க்கப்படாத தோற்றுவாய்களின் கோப்புகள் அல்லது செயலிகளைப் பதிவிறக்குவதைத் தவிர்ப்பதும் இதில் அடங்கும்.

நாங்கள் பாதுகாப்பில் தீவிரமான பார்வையை எடுத்து வருகிறோம், வங்கி மோசடி மற்றும் அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனைகளுக்கு எதிராக பயனர்களின் தரவு பாதுகாக்கப்படுவதை உறுதிசெய்யும் நடவடிக்கைகளை முன்னெடுத்துச் சென்று தீவிரப்படுத்தி வருகிறோம்.

7 ஜூன் 2022 அன்று வெளியிடப்பட்ட மலேசிய கணினி பாதுகாப்பு மறுமொழி குழுவின் (MyCERT) பாதுகாப்பு ஆலோசனையால் பரிந்துரைக்கப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து பயனரின் கவனத்தை ஈர்க்க விரும்புகிறோம். MyCERT பரிந்துரைத்த நிதி தீங்குநிரலைத் தவிர்ப்பதற்கான சில பாதுகாப்புகள்:

  • அறியப்படாத தோற்றுவாய்களிடம் இருந்து எந்த செயலி அல்லது ஆண்ட்ராய்டு பேக்கேஜ் கிட் (.apk) கோப்பை நிறுவ வேண்டாம். ஏனெனில் இது உங்கள் சுய விவரங்களையும் உங்கள் கணக்குச் சான்றுகளையும் திருடுவதற்காக வடிவமைக்கப்பட்ட தீங்குநிரலாக இருக்கலாம்;
  • குறுஞ்செய்தி / செய்தி சேவைகள் மூலம் அனுப்பப்படும் விளம்பரத் திணிப்பி அல்லது சந்தேகத்திற்கிடமான URL -ஐ சொடுக்க வேண்டாம்;
  • உங்கள் சாதனத்தை ரூட் அல்லது ஜெயில்பிரேக் செய்ய வேண்டாம்;
  • செயலியை நிறுவும் முன் அதன் அனுமதி அமைப்புகளையும், செயலியின் படைப்பாளி அல்லது வெளியீட்டாளரையும் சரிபார்க்கவும்;
  • அதிகாரப்பூர்வ தோற்றுவாய்களில் இருந்து மட்டுமே செயலிகளைப் பதிவிறக்கவும்;
  • உங்கள் கையடக்க சாதனத்தில் வைரஸ் தடுப்பை நிறுவி, அதை தொடர்ந்து இயக்கவும்; மற்றும்
  • உங்கள் கையடக்க சாதனத்தின் இயங்குதளம் (OS) மற்றும் செயலிகளை தொடர்ந்து புதுப்பிக்கவும்.

     இணைய குற்றவாளிகள் மற்றும் இயங்கலை மோசடியாளர்கள் தொடர்ந்து தங்கள் முறைகளை மாற்றிக்கொண்டிருப்பதால், நாங்கள் பொதுமக்களை வலியுறுத்த விரும்புகிறோம்:

 • அறியப்படாத அல்லது சரிபார்க்கப்படாத தரப்பினருக்கு உங்கள் சுய விவரங்கள் மற்றும் / அல்லது கணக்குச் சான்றுகளை ஒருபோதும் வெளியிடாதீர்கள்;
 • உங்கள் பரிவர்த்தனை அங்கீகாரக் குறியீடு (TAC) அல்லது சுய அடையாள எண் (PIN) அல்லது உங்கள் இயங்கலை உள்நுழைவு பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல்லை மற்றவர்களுக்கு ஒருபோதும் வெளியிடாதீர்கள்;
 • அறியப்படாத, சந்தேகத்திற்கிடமான அல்லது சரிபார்க்கப்படாத மின்னஞ்சல்களில் இருந்து அனுப்பப்படும் எங்கள் வலைத்தளத்திற்கான இணைப்புகளை ஒருபோதும் சொடுக்க வேண்டாம். எப்பொழுதும் எங்கள் இணையதள முகவரியை நேரடியாக உங்கள் இணைய உலாவியில் உள்ள URL பட்டியில் உள்ளிடவும் அல்லது எங்கள் Kayaaku பணப்பையின் அதிகாரப்பூர்வ செயலியைப் பயன்படுத்தவும்;
 • ஆள்மாறாட்டம் செய்து பிரபலமான பொருட்கள் அல்லது சேவைகளை வழங்கும் போலி இணையதளத்தைத் தவிர்க்கவும். மோசடி இணையதளங்கள் பொதுவாக உண்மையாக இருக்க முடியாத விலைகளை வழங்குகின்றன, மற்றும் பெரும்பாலும் எழுத்துப்பிழைகளால் நிறைந்திருக்கும்;
 • இயங்கலை பரிவர்த்தனைகளுக்கு பொது அல்லது திறந்த வைஃபை பிணையங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்;
 • நீங்கள் பயன்படுத்தும் இணையதளம் அல்லது செயலி உண்மையானது மற்றும் அதிகாரப்பூர்வமானது என்பதை எப்போதும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்; மற்றும்
 • எப்பொழுதும் எங்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்க்கவும் அல்லது எங்களின் துரித எண்ணை (உங்கள் ப்ரீபெய்ட் அட்டையின் பின்புறம் அல்லது இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது) தகவல், சரிபார்ப்பு மற்றும் சந்தேகம் இருந்தால் தெளிவுபடுத்த நேரடியாகத் தொடர்புக் கொள்ளவும்.

Finexus அட்டை கணக்கு வைத்திருப்பவர்கள் தங்கள் அறிக்கைகள் மற்றும் பரிவர்த்தனை விழிப்பூட்டல்களை உன்னிப்பாகக் கண்காணிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். ஏதேனும் வழக்கத்திற்கு மாறான அல்லது சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனைகளை அவர்கள் கவனித்தால், அந்த பரிவர்த்தனைகள் தொடர்பான புகாரைத் தெரிவிக்க, எங்களின் வாடிக்கையாளர் சேவை ஆதரவுக் குழுவை விரைவில் தொடர்பு கொள்ள வேண்டும். அடுத்து, காவல்துறையில் புகார் செய்யுங்கள். அதன் பிறகு, காவல்துறை புகாரின் நகல் மற்றும் அனைத்து தொடர்புடைய பதிவுகள் மற்றும் பரிவர்த்தனை வரலாறு போன்ற ஆவணங்களுடன் எழுத்துப்பூர்வமாக எங்களுக்குத் தெரிவிக்கவும். புகாரளிக்கப்பட்ட பரிவர்த்தனை உண்மையில் அங்கீகரிக்கப்படாததா என்பதைத் தீர்மானிக்க உரிய விசாரணை செயல்முறைகள் உள்ளன.

இணையம் மற்றும் நடமாடும் வங்கிச் சேவைகளை உள்ளடக்கிய உயர்-பாதுகாப்புத் தரங்களை ஏற்றுக்கொள்வது எங்களின் முதன்மையான முன்னுரிமை என்பதை நாங்கள் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு மீண்டும் வலியுறுத்தி உறுதியளிக்க விரும்புகிறோம். மலேசிய மத்திய வங்கி (BNM) மூலம் ரூட்டிங் பாதுகாப்பு விமர்சனங்கள் மற்றும் ஆலோசகர்கள் ஏற்கனவே உள்ள கட்டுப்பாடுகளை மேம்படுத்தவும், வாடிக்கையாளர்களுக்கு பயனுறுதியான சேவைகளை பராமரிக்கும் போது சமீபத்திய அச்சுறுத்தல்களுக்கு எதிராக போதுமான பாதுகாப்பை உறுதி செய்யவும் நிதி நிறுவனங்களுக்கு வழங்கப்படுகின்றன.

நிதி நிறுவனங்கள், BNM மற்றும் பிற அதிகாரிகள் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக வெளியிடும் அறிவுரைகள் மூலம் வெளிவரும் அச்சுறுத்தல்கள் குறித்துத் தெரிவிக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. இணையக் குற்றவாளிகள் மற்றும் இயங்கலை மோசடியாளர்களிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள தனிநபர்கள் எடுக்கக்கூடிய சமீபத்திய அச்சுறுத்தல்கள் மற்றும் நடவடிக்கைகள் பற்றிய தகவல்களைப் பெறலாம் https://www.abm.org.my/consumer-information/fraud-alerts

You are about to enter a third-party website and Finexus Cards’ privacy policy will cease to apply.

Finexus Cards does not verify, endorse or make warranties of this linked website below.

Do you wish to proceed to the following URL?

https://www.paynet.my/

You are about to enter a third-party website and Finexus Cards’ privacy policy will cease to apply.

Finexus Cards does not verify, endorse or make warranties of this linked website below.

Do you wish to proceed to the following URL?

https://www.ofs.org.my/en/

You are about to enter a third-party website and Finexus Cards’ privacy policy will cease to apply.

Finexus Cards does not verify, endorse or make warranties of this linked website below.

Do you wish to proceed to the following URL?

https://www.bnm.gov.my/