இயங்கலை பாதுகாப்பு குறிப்புகள்

  1. உங்கள் வீட்டு இணைய அகன்ற அலைவரிசை ஊடுருவப்பட்டுள்ளதாக யாராவது அழைத்தார்களா? இது ஒரு மோசடி அழைப்பு! உடனே அழைப்பை துண்டித்து விடுங்கள்.
  2. எச்சரிக்கை: தொலை ஆதரவு / திரை பகிர்வு (எடுத்துக்காட்டு: டீம் வியூவர் குவிக் சப்போர்ட்) செயலியை உங்கள் கையடக்க சாதனத்தில் நிறுவ வேண்டாம். இந்த செயலிகள் மோசடியாளர்கள் உங்கள் கையடக்க சாதனத்தில் உள்ள உங்களின் அனைத்து தகவல்களையும் பார்க்க அனுமதிக்கும்.
  3. நிலுவையில் உள்ள கடன் அட்டை / தனிநபர் கடன் அல்லது மலேசிய மத்திய வங்கியில் இருந்து வரும் நிதி பரிமாற்றம் குறித்த அழைப்புகளை ஏற்க வேண்டாம்.
  4. பணமோசடி குற்றச்சாட்டுகளைத் தீர்ப்பது தொடர்பாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (MACC) அழைப்புகளை ஏற்க வேண்டாம்.
  5. மலேசியாவின் உள்நாட்டு வருவாய் வாரியத்தின் வரித் திருப்பிச் செலுத்துதலுக்காக உங்கள் கணக்கு எண்ணைப் புதுப்பிக்கும்படி எந்த வங்கியிலிருந்தும் வரும் அழைப்புகள் / மின்னஞ்சல்களை ஏற்க வேண்டாம்.
  6. உங்கள் கணக்குத் தகவல், உள்நுழைவு ID, கடவுச்சொல் அல்லது OTP ஆகியவற்றை மூன்றாம் தரப்பினருக்கோ அல்லது எங்கள் ஊழியர்களுக்கோ வெளிப்படுத்த வேண்டாம். சந்தேகம் இருந்தால், Finexus Card Sdn Bhd வாடிக்கையாளர் சேவையை அழைக்கவும்.
  7. பிஷிங் மற்றும் தீங்குநிரல் குறித்து ஜாக்கிரதை. மின்னஞ்சல், குறுந்தகவல், செய்தியிடல் செயலிகள் அல்லது சமூக ஊடகங்களில் கொடுக்கப்பட்டுள்ள எந்த இணைப்புகளையும் சொடுக்க வேண்டாம்.
  8. உங்கள் வைரஸ்-எதிர்ப்பு / தீங்குநிரல்-எதிர்ப்பு மென்பொருளை தானாக புதுப்பிக்கும் வகையில் அமைத்து உங்கள் சாதனத்தை தொடர்ந்து வருடல் செய்யவும். பாதுகாப்பாக இருக்க உங்கள் இணைய உலாவி மற்றும் Kayaaku பணப்பை செயலியை தொடர்ந்து புதுப்பிக்கவும்.
  9. தடையற்ற FINEXUS Kayaaku பணப்பையை அனுபவிக்க உங்கள் இணைய உலாவி பாதுகாப்பு அமைப்புகளை TLS 1.2 -ஐ ஆதரிக்க மாற்றவும்.
  10. வலுவான கடவுச்சொல்லை உருவாக்க, எழுத்துக்கள் (பெரிய எழுத்துக்கள் உட்பட), எண்கள் மற்றும் சிறப்பு குறிவடிவம் கலவையைப் பயன்படுத்த நினைவில் கொள்ளுங்கள். உங்கள் கடவுச்சொல் 8 முதல் 20 எழுத்துகளுக்குள் இருக்க வேண்டும். உங்கள் கடவுச்சொல்லை அடிக்கடி மாற்ற மறக்காதீர்கள்.