பிஷிங் ஒரு செய்தியை சொடுக்கி சுய விவரங்களை வெளிப்படுத்த உங்களை ஏமாற்றும் நோக்கத்தைக் கொண்டது.
தொலைபேசி மோசடி செய்பவர்கள் அடையாளத் திருடுவதற்காக உங்கள் சுய விவரங்களைப் பெற முயற்சிப்பார்கள்.
பொட்டலம் மோசடி செய்பவர்கள் தங்களுக்கு அனுப்பப்பட்ட பொருட்களை விடுவிக்க பணம் செலுத்துமாறு மக்களை வற்புறுத்த முயற்சிப்பார்கள்.
ஒரு நண்பர் / உறவினரிடமிருந்து விரைவாகப் பணப்பரிமாற்றம் செய்யும்படி உங்களுக்கு பொய்யான அவசரச் செய்திகள்.
கடன் வழங்குவதாகக் கூறி உங்களின் சுய மற்றும் வங்கி விவரங்களைக் கோரும் போலி நிதி நிறுவனங்கள்.
தவறான தளங்களில் சொடுக்குவதோ அல்லது உங்கள் வன்பொருளைத் தாக்கக்கூடிய தீங்குநிரலைப் பதிவிறக்கவோ உங்களை ஏமாற்றும் இணைப்புகள்.